அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
படித்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதன் விளைவே இந்த பதிவு.உளவியல் மற்றும் உளவளஆற்றுபடுத்துகை தொடர்பாக கற்றுக் கொண்டு இருப்பதனால் அதனுடன் தொடர்பு பட்ட பதிவு. இருந்தாலும் என்னவோ தெரியல எல்லா விடயங்களும் இஸ்லாத்துடன் தொடர்பு பட்டு காணப்படுகின்றது என்பதை மறுக்கவும் , மறைக்கவும் முடியல.பதிவ படிச்சு முடிச்சதும் உங்களுக்கே புரியும் நான் ஏன் அப்டி சொன்னன் என்று.
பெற்றோர்களுக்கு எப்போதும் தமது குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆற்றல் மிக்கவர்களா இருக்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே இருக்கிறது.ஆசை மட்டும் இருந்தால் போதாது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.அப்படி ஆயின் சிறந்த பயிற்சிகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமே தவிர திணிக்கக்கூடாது.அந்தவகையில் ஒரு குழந்தையை எவ்வாறு ஆளுமை மிக்கவராக வளர்க்கலாம் என்பதை அறிய முதல் ஆளுமை என்றால் என்ன? என்பது தொடர்பாக சுருக்கமாக நோக்கலாம்.
ஆளுமை என்பதைச் சுருக்கமாக "ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று" என வரையறுக்கலாம்.ஆளுமை என்னும் தமிழ்ச் சொல் "பர்சனாலிட்டி" (Personality) என்னும் ஆங்கிலச்
சொல் குறிக்கும் கருத்துருவைக் குறிக்க ஏற்பட்டது. இலத்தீன் மொழியில்
"பர்சனா" (persona) என்பது 'மறைப்பு', 'முகமூடி' என்னும் பொருள் தருவது.
எனவே ஆளுமை என்பது "ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி" என்னும் கருத்துருவின்
அடிப்படையைக் கொண்டுள்ளது.
- குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களை மடியில் அமர்த்துவது, தூக்குவது, அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது என்பன குழந்தைகளின் ஆளுமை விருத்திக்குப் பெரிதும் உதவும். நாம் பாதுகாப்பான, அன்பான சூழலில் வாழ்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்குப் பெரிதும் உத்வேகம் அளிக்கும்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதனை நமக்கு வாழ்ந்து காட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உதாரணமாக
நபி(ஸல்) அவர்களின் அடிமையாக இருந்த ஸைத்(ரழி) அவர்களது மகன் உஸாமா(ரழி)
அவர்கள் பார்ப்பதற்குக் கண்ணங்-கரேர் என்று இருப்பார். இவருடைய தாயார் ஒரு
‘நீக்றோ’ அடிமையாவார்கள். நாம் அழகான பிள்ளைகள் மீதுதான் அன்பைச் சொரிவோம்.
அவர்களைத்தான் அள்ளி அணைப்போம்.ஆனால் நபி(ஸல்) அவர்கள் பார்க்கப்
பிடிக்காத பிள்ளைகளுடனும் பாசத்தைப் பொழிந்து பழகுவார்கள்.
எனவே குழந்தைகளிடம் காட்டப்படும் பாராபடசம் அவர்களின் ஆளுமை சிதைவுக்கு வழிவகுக்கின்றது.
- குழந்தையின் ஆளுமையை விருத்தி செய்வதில், கட்டி எழுப்புவதில் விளையாட்டுக்குப் பெரும் பங்குண்டு. குழந்தையுடன் விளையாட்டும் பிறக்கின்றது. குழந்தை சுதந்திர வளர்ச்சியில் அதன் தன்னுணர்வில் விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. விளையாடும் போது குழந்தை தன்னைத்தானே அறிந்து கொள்கின்றது. குழந்தை விளையாட முயன்று தவறுகின்றது. அவ்வனுபவத்தை திரும்பப் பெறுவதால் தன் தவறுகளை தானாகவே திருத்திக் கொள்கின்றது. விளையாடும் போது குழந்தை சிந்திக் கின்றது.விளையாட்டானது குழந்தையின் உடல், அறிவு, உள, சமூக வளர்ச்சிக்குறிய களமாக அமைகின்றது. விளையாட்டில் ஈடுபடல், மன மகிழ்வு, ஆறுதல் போன்ற இலக்குகளாக கொண்டிருக்கும் அதே நேரம் சுதந்திரமாகச் சிந்திக்கவும் பல்வேறு திறன்களை குழந்தை பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.
நபி ஸல் அவர்கள் குழந்தைகளுடன் விளையாடினார்கள். அவர்களுடன் நகைச்சுவையாகப்
பேசினார்கள். குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். அவ்வாறே நபிகளார் குழந்தைகளுக்கிடையில் போட்டிகளை ஏற்பாடு செய்து
பரிசில்களை வழங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஹர்த் அறிப்பவதாவது நபி ஸல்
அவர்கள் அப்துல்லாஹ், உபைதுல்லாஹ் போன்ற அப்பாஸ் ரழி அவர்களின் பல
பிள்ளைகளை ஓர் அணியாக நிற்கவைப்பார்கள். பின்னர் அவர்களைப் பார்த்து யார்
முந்தி வருகிறாரோ அவருக்கு இன்ன இன்ன பரிசுகள் தருவேன் என்று
அறிவிப்பார்கள். அப்பொழுது குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிப்போய்
நபிகளாரின் முதுகிலும் மார்பிலும் விழுவார்கள். நபிகளார் அவர்களை
வாரியணைத்து முத்தமிடுவார்கள். (ஆதாரம் அஹ்மத் 1/1836)
‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின்
மீது சத்தியமாக அவர்கள் என்னைப் பார்த்து ‘சீ..!’ என்றோ, நான் செய்த ஒரு
செயல் குறித்து ‘ஏன் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத ஒரு செயல் குறித்து
‘ஏன் செய்யவில்லை?’ என்றோ கேட்டதில்லை’ என்ற அனஸ்(ரழி) அவர்களின் கூற்றுக்
குறித்துச் சிந்திப்பது அவசியமாகும்.
எனவே பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள்.குழந்தைகளின் உள்ளம் விதைப்பதற்கு தயாராக இருக்கும் ஈரநிலம் போன்றது.அதில் என்ன விதைப்பது ,எவ்வாறு அறுவடை செய்வது என்பது உங்கள் கைகளிலே உள்ளது.
வஸ்ஸலாம்
உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்
Tweet | ||||||
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
உளவியல் ரீதியாக எழுதப்பட்ட நேர்த்தியான கட்டுரை. அதிலும் தேவையான இடங்களில் நபி மொழிகளை இணைத்தது கூடுதல் சிறப்பு
பகிர்ந்த பதிவிற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
:)
வலைக்கும் ஸலாம் சகோ..
Deleteவருகைக்கும், கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
ஸலாம் சகோ பஸ்மின்...
ReplyDelete//உளவியல் மற்றும் உளவளஆற்றுபடுத்துகை தொடர்பாக கற்றுக் கொண்டு இருப்பதனால்//
அல்லாஹ் உங்களது கல்வி அறிவை விசாலமாக்குவானாக...
ஆளுமைத்திறன் குறித்த இந்தப்பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எனக்குப்படுகிறது...
குழந்தையிடம் எப்படி ஆளுமை வந்துசேருகிறது...அதற்கு என்ன தேவை,பெற்றோரின் கடமை என்ன என்பதை அறியத்தந்துள்ளீர்கள்..
சிலர் இயல்பாக செய்யும் செய்கையும் அவர்களை பாதிக்கும் என்பதை உற்றுகவனித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும்..உற்று கவனிக்க வைக்கிறது இப்பதிவு...
இந்தப்பதிவை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றேனென்றால்...
சம காலத்தில் வளரும் இருபிள்ளைகளில் ஒன்று நாட்டை ஆள்கிறது...இன்னொன்று வீட்டைக்கூட ஆள தகுதியில்லாததாய் போவதன் அடிப்படை இந்த ஆளுமைத்திறனில் இருக்கிறது...
அது பிள்ளைகள் வளரும் போதே ஊட்டப்படவேண்டியது..வளர்ந்தபின் கோச்சிங் க்ளாஸ் போயெல்லாம் தேற்றுவது கடினம்...
வாழ்த்துக்கள் சகோதரி...
தொடர்ந்து படியுங்கள்..தொடர்ந்து எழுதுங்கள்..
அன்புடன்
ரஜின்
வலைக்கும் ஸலாம் சகோ..
Deleteவருகைக்கும், கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
"அல்லாஹ் உங்களது கல்வி அறிவை விசாலமாக்குவானாக..." ஆமீன்
பெற்றோர் பங்கு தான் முதன்மையானது.அதள் பிறகு தான் சுற்று சூழல் செல்வாக்கு செலுத்துகின்றது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்..குழந்தையின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு பற்றிய அருமையான பதிவு..
பிள்ளைகளுக்கு முதல் ஆசிரியர்கள் பெற்றோரே.அவர்களின் அடித்தளம் சரியாக அமைக்க படுவதற்கு பெற்றோரின் பங்கு முக்கியம் என்று மிக அழகா சொல்லி இருங்கீங்க..
வாழ்த்துக்கள் பஸ்மின்.. நல்லதொரு பதிவுக்கு நன்றி..:-))
வலைக்கும் ஸலாம் சகோ..
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் கைரன் சகோ