Saturday, April 21, 2012

முகபுத்தகத்தில் அறிமுகமான முகம் தெறியா நண்பர்கள் மனதை மாற்றிய கதை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 
நண்பர்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானவர்கள்.நட்பு என்பது இல்லாத மனிதன் இன்று அவன் வாழும் வாழ்வில் பல விடயங்களை இழக்கின்றான்.பாடசாலை நட்பு; பல்கலைக்கழக நட்பு; ரயில் பயண நட்பு; டீக்கடை நட்பு; என பல தரப்பட்ட வகையில் நட்பு வளர்ந்து கொண்டு செல்ல இன்று அவைகளுக்கு மத்தியில் பிரபலமான நட்பு இணையத்தள நட்பாகும்.சமூக தளங்களில் நட்பு வளர்பதே இன்று அதிகமாகி விட்டது.அதிலும் குறிப்பாக முகப்பத்தகத்தில் (Facebook) நட்பு வளர்த்தல்  இன்றுஅவசியமானதாக கூட மாறிவிட்டது.இந்த பதிவும் அவ்வாறு முகப்புத்தகத்தில்  வளர்ந்த ; வளர்ந்து கொண்டிருக்கும் நட்பு தொடர்பானது தான்.


என்னடா ஆரம்பத்துலையே நட்பு , நட்பு என்று உயிர வாங்குரன்னு யோசிக்கீறீங்களா ? அத அவ்வளவு சாதாரணமா  எடை போட முடியாது. இணைத்தள நட்பு என்றது மத்தவங்களுக்கு எப்படியோ ஆனா எனக்கு ஒரு எல்லையை நானே போட்டுக்கிட்டன். ஆரம்பத்தில்  முகபுத்தகத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழக நண்பர்களை மாத்திரமே இணைத்துக் கொள்வது என்றும் அதிலும் பல்கலைக்கழக நண்பர்கள் என்ற ரீதியில் என்னுடன் மிக மரியாதையாக பழக தெரிந்த நண்பர்களை மாத்திரம் இணைத்துக் கொள்வது என்று.இதனால் ஆரம்பத்தில் தெரியாதவர்களிடம் இருந்து வரும் எந்த தொடர்பையும் நான் ஏற்றுக்கொண்டது இல்லை.ஆனால் இந்த நிலை சீக்கிரம் மாறியது.முகப்புத்தகத்தில் இஸ்லாம் தொடர்பாக நிறைய சகோதரர்கள் பதிவுகள் போடுவதை பார்த்து அவர்களை தொடர தொடங்கினேன்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்ட வேண்டும் என எண்ணியதை யாரால் மாற்ற முடியும்???????????

மாஷாஅல்லாஹ் அருமையான நடபு கிடைத்தது.நண்பர்கள் என சொல்லி தூரம் வைக்க விரும்பவில்லை.சகோதரர்கள் என்று சொல்லலாம்.அவ்வளவு நெருக்கம்.என்னுடைய ஒவ்வொரு விடயத்திலும் மாற்றம் ஏற்பட்டது. முக்கியமாக....
  1. வாசிப்பு பழக்கம் அதிகமானது.
  2. எழுத்தாற்றல் அதிகரித்தது.
  3. எதையும் நுணுக்கமாக ஆராயும் பண்பு வளர்ந்தது.
  4. இஸ்லாமிய அறிவு வளர்ந்தது.
  5. விமர்சன சிந்தனை வளர்ந்தது.
  6. அனைத்து விடயங்களையும் இஸ்லாமிய அடிப்படையில் சிந்திக்கும் மனப்பக்குவம் உருவானது. (அல்ஹம்துலில்லாஹ்.) 
இன்னும் பல மாற்றங்கள்.இத்தகைய ஒவ்வொரு மாற்றத்திற்கும் பல சகோதரர்கள் பின்நின்றனர்.குறிப்பாக யார் பெயரையும் குறிப்பிடமுடியவில்லை.  (காரணம்:- அவர்கள் யாருக்கும் விளம்பரம் பிடிக்காது)
இதுவரையில் யாருடைய முகம்களும் எனக்கு தெரியாது.என்னுடைய முகம் கூட யாருக்கும் தெரியாத அளவிற்கு புனிதமான நட்பு.சில்லறைத்தனமான பேச்சுக்களுக்கு இடம் இல்லை.இஸ்லாத்திற்கும், அறிவுக்குமாய் சேர்ந்த கூட்டம். இதை யாரும் தடுக்கவோ , எதிர்கவோ முடியாது.
முகப்புத்தகத்தில் டைம் பாஸ் பண்ணிக்கொண்டிருந்த என்னை இஸ்லாத்திற்காய் உலா வர வைத்தது இந்த சகோதரத்துவம். என்னுடைய புகைப்படம் போடவிடினும் என்னுடைய அடையாளத்தை மாற்றியது இந்த சகோதரத்துவம்.ஒருவருக்கு கமெண்ட் பண்ணும் போது இவ்வாறு தான் பண்ண வேண்டும் என்று வரையறை சொல்லி தந்தது இந்த சகோதரத்துவம். 
என்னுடைய சந்தேகங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்து விளக்கம் அளித்தது இந்த சகோதரத்துவம்.எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காதது, எதிர்பார்ப்பும் இல்லாதது.என்னுடைதிறமையை மதித்து என்னை எழுத தூண்டியது இந்த சகோதரத்துவம் தான்.
 ஊர் குருவியாய் வலம் வந்த என்னை பீனிக்ஸ் பறவையாய் மாற்றியது இந்த சகோதரத்துவம்.அல்ஹம்துலில்லாஹ்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (-குடும்பத்தலைவன்-) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.
அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 121
Volume :5 Book :67 
என்ற ஹதிஸின்  உண்மையை உணர்த்தியது இந்த சகோதரத்துவம் தான்.
அல்லாஹ் என்னுடைய மாற்றத்தில் பங்கு கொண்ட ஒவ்வொரு சகோதரருக்கும் உன்னிடம்  இரு கரம் ஏந்தி பிரார்திக்கின்றேன்.இவர்கள் அனைவருக்கும் நல்லருளை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கு நல்ல அறிவு ஞானத்தை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் வழங்குவாயாக, எங்கள் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி விடாதே யாஅல்லாஹ்.. என்றுமே எங்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்துவாயாக.ஆமீன் . 
 
வஸ்லாம்.
உங்கள் சகோதரி..
க.பஸ்மின்.

34 comments:

  1. சலாம் பீனிக்ஸ் பறவை,

    முதல் பதிவு போல...மாஷா அல்லாஹ்... பதிவுலகில் பீனிக்ஸ் பறவையாய் இருக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் சலாம். சகோ. முதல் வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..
      இன்ஷாஅல்லாஹ் எழுத்து பணி இனி தொடரும்..

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
    ///அவர்களுக்கு நல்ல அறிவு ஞானத்தை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் வழங்குவாயாக, எங்கள் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி விடாதே யாஅல்லாஹ்.. என்றுமே எங்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்துவாயாக.ஆமீன்///

    ஆமீன் ஆமீன் உங்கள் சகோதரனுக்காக துஆ செய்யும் போது உங்களுக்காக மலக்குமார்கள் துஆ செய்வார்கள் என்று முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

    சோ மலக்குமார்களின் துஆ வை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் வாழ்த்துகள் .

    ReplyDelete
  3. வலைக்கும் சலாம் சகோ.

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. சலாம் பஸ்மீன்

    கண்ணு கலங்க வச்சுட்டீயேம்மா கண்ணு கலங்க வச்சுட்டீயே... ஹி..ஹி..ஹி...

    அண்ணன்மார்ங்களாம் ஆனந்தகண்ணீர் விடுறாங்க பாரு அவ்வ்வ்வ்

    அழகான நட்பு கிடைத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள் பஸ்மீன்.

    நல்ல எழுத்து நடை உங்களுக்கு. இலங்கையர் என்றாலே இலக்கியத்துல வெளுத்துவாங்குவீங்க போல :-) படிக்க படிக்க சுவாரசியமா இருந்துச்சு

    தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் சலாம் ஆமீனா.
      வாழ்த்துக்களுக்கு நன்றிபா.
      உங்க ஆதரவு இருந்தா தொடர்ந்தும் எழுதலாம் .இன்ஷா அல்லாஹ்

      Delete
  5. ஸலாம் சகோ ஃபஸ்மின்....

    மாஷா அல்லாஹ்...உங்களது இந்த அனுபவம் பொதுவாக நம் அனைவருக்குமே உண்டுதான்... நாம் ஒருவருக்கொருவர் நன்மையான காரியங்களில் உதவிக்கொள்ளும் மார்க்க சகோதரர்களாக் இருக்கும் காரணத்தால்..

    உங்களது துஆ அருமை..அல்லாஹ் அனைவருக்கும் அதை உரித்தாக்க போதுமானவன்..ஆமீன்

    முதல் பதிவு...இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுங்கள்....

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் சலாம் ரஜின் சகோ,

      பதிவுலகில் நல்ல நண்பர்களுடன் எடுத்து வைத்த முதல் காலடி.நிச்சயமாக உங்கள் அனைவரதும் எதிர்பார்பை பூர்த்தி செய்வேன்.
      இன்ஷா அல்லாஹ்

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

    மாஷா அல்லாஹ்..மிக அருமையான எழுத்து நடை.உங்களின் அனுபவம் கொஞ்சம் என்னையும் திரும்பி பார்க்க வைத்தது என்றால் மிகையில்லை..

    உண்மை தான் அழகான நட்பு கிடைப்பது ஒரு வரம்..இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் சலாம்.
      வாழ்த்துக்களுக்கு நன்றிபா.
      உங்க ஆதரவு இருந்தா தொடர்ந்தும் எழுதலாம் .இன்ஷா அல்லாஹ்

      Delete
  7. முகம் தெரியா நண்பி Fasmin, அஸ்ஸலாமு அலைக்கும்...
    அழகான பதிவு...மாஷாஅல்லாஹ் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறேன்

    அன்புடன்...
    Fazmina Razick

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் சலாம்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி Fazmina Razick

      Delete
  8. Assalaamu Alaikum wa rahmathullaahi vabara kaaththuhu,

    To be open, I don't have any words to describe this Post. Simply stunning. May Allah (swt) bless you with more knowledge and happiness.

    wassalam,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  9. valikum salaam wa rahmathullaahi vabara kaaththuhu,
    Aashiq brother,

    jashahallahair 4 your wishes.. may allah bless you too

    yours sister,
    fasmin

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    முதல் போஸ்டே அசத்தல் ...:-)




    (( போன தடவை இங்கே (ஃபாலோயரா )வந்த போது வேறு ஏதோ இருந்ததா நினைவு )) :-)

    ReplyDelete
  11. வலைக்கும் சலாம் வரஹ்

    சகோ ஜெய்லானி :- வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    போன தடவை இங்கே (ஃபாலோயரா )வந்த போது வேறு ஏதோ இருந்ததா நினைவு )) :-) அதுவா அது இங்கிலிஸ்ல ஒரு பதிவு போட்டன், ரொம்ப பேரு மிரட்டினாங்க எதுக்கு வம்புனு தூக்கிட்டன்.ஹிஹி..

    ReplyDelete
  12. சலாம் சகோ.பஸ்மின் கபீர்,

    ///அனைத்து விடயங்களையும் இஸ்லாமிய அடிப்படையில் சிந்திக்கும் மனப்பக்குவம் உருவானது. (அல்ஹம்துலில்லாஹ்.)///

    பல பின்னூட்டங்களுக்கு பின்னர், பல பதிவுகளுக்கு பின்னர், பல மாதங்களுக்கு பின்னர், மாற்றம் பற்றி பல சமயம் நான் உட்பட பலர் சொல்ல எழுத நினைத்தது வார்த்தைகளாக இங்கே..!

    மாஷாஅல்லாஹ்.

    அவ்ளோதான். அவ்ளவேதான். இதுக்கு அப்புறம் வேறு என்ன இருக்கிறது ஒரு முழு முஸ்லிமுக்கு..? தாங்கள் தொடர்ந்து இறைப்பணியில் சிறப்பாக ஈடுபட துவா செய்கிறேன்.

    ReplyDelete
  13. வலைக்கும் சலாம்.சகோ முஹம்மது ஆசீக்,

    வாழ்த்துக்கும் தூவாக்கும் நன்றி.
    "பல பின்னூட்டங்களுக்கு பின்னர், பல பதிவுகளுக்கு பின்னர், பல மாதங்களுக்கு பின்னர், மாற்றம் பற்றி பல சமயம் நான் உட்பட பலர் சொல்ல எழுத நினைத்தது வார்த்தைகளாக இங்கே..! " அவசரபட்டு போட்டுட்டனோ??????????
    உங்கள் சகோதரி
    பஸ்மின் கபீர்

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!.

    உணர்ந்து எழுதிய ஆக்கம், மாஷா அல்லாஹ்!.


    //ஊர் குருவியாய் வலம் வந்த என்னை பீனிக்ஸ் பறவையாய் மாற்றியது இந்த சகோதரத்துவம்.அல்ஹம்துலில்லாஹ்//

    புகழனைத்தும் இறைவனுக்கே!.

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் ஸலாம்.ஐஸாக்கலாஹைரா சகோ.

      வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  15. உங்களின் நாட்டங்கள் யாவும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு அவனுடைய அருளினால் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.. தொடருங்கள் பாஸ்மீன்.

    ReplyDelete
  16. ஸ்டார்ஐன் சகோ. வருகைக்கு நன்றி.

    உங்கள் பிரார்த்தனை அல்லாஹ் அங்கீகரிப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
    அருமையான பதிவு வாழ்த்துகள்...

    ///இணைத்தள நட்பு என்றது மத்தவங்களுக்கு எப்படியோ ஆனா எனக்கு ஒரு எல்லையை நானே போட்டுக்கிட்டன். ஆரம்பத்தில் முகபுத்தகத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழக நண்பர்களை மாத்திரமே இணைத்துக் கொள்வது என்றும் // நானும் இதே கட்டுப்பாட்டுல இருந்தவதான் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் முகம் தெரியாத இஸ்லாமிய நண்பர்களை இணைக்க ஆரம்பித்தேன் முகபக்கத்தில்....
    அல்ஹம்துலில்லாஹ் அழகான நட்பு வட்டத்தை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறான்.....
    வலை உலகில் உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி.... :)

    ReplyDelete
  18. வலைக்கும் ஸலாம் ஸர்மிளா,

    வாழ்த்துக்களுக்கு நன்றிமா.நமக்கு கிடைத்த நட்பை இறைவனுக்காகவும் இஸ்ஸாத்தக்குக்குமாய் பயன் படுத்துவோம்.
    இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  19. அஸ்ஸலாம் அலைக்கும்...சகோஸ்,
    கன்னிப்பதிவு ....!! அசத்தலான எழுத்து நடை...!!
    மேன்மேலும் சிறப்புடன் வளர தூவா செய்கிறேன்...ஆமின் .

    ReplyDelete
  20. வலைக்கும் ஸலாம் சகோ,
    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் ஸலாம் சகோ,

      எல்லோரும் எல்லாம் கற்றுக் கொண்டு வருவதில்லை. இன்ஷாஅல்லாஹ் உங்களிலும் மாற்றம் வரும்.

      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி :)

      Delete
  22. மாஷா அல்லாஹ்...மிக அழகான பதிவு.... அழகான எழுத்து நடை.... தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி :)

      Delete
  23. "It is not upon you to grant them guidance. Allah guides whom He wants!" [Quran 2:272]

    "(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;" [Quran 2:272]

    Thank Allah for guiding you sister :-)

    ReplyDelete
  24. ஐஸாக்கல்லாஹைரா ஆதில்

    நிச்சயமாக அல்லாஹ் தான் நேரிவழி காட்டியுள்ளான்

    ReplyDelete