ரஹீமாவை அவரது தாய் கைத்தாங்கலாக அழைத்து வந்தார் அந்த மரண (மைய்யத்) வீட்டுக்கு.அவள் அந்த வீட்டில் நுழைந்ததும் அங்கிருந்த பெண்களின் குரல் எல்லாம் ஓங்கி ஓலிக்க தொடங்கியது.அவளுக்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை.ஓர் ஓரமாய் போய் இருந்து
கொண்டாள்.சாதீக்கின் உடல் அங்கே வைக்கப்பட்டிருந்தது.அருகில் சென்று
பார்க்க கூட அவளுக்கு தயக்கமாக இருந்தது.பேசாமல் சாதீக்கின் சகோதரியின்
அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள்.."என்ன சோதனை யாஅல்லாஹ் ! அடுத்த கிழமை எனக்கு மணமகனாக என்னருகில் இருக்க வேண்டியவர்.இன்று மண்ணறைக்கு செல்லப்போகின்றாரே..உன் முடிவிற்கு யார் இங்கு மறுப்பு சொல்ல இயலும்" இவ்வாறான பல எண்ண ஓட்டங்கள் அவளை அறியாமலே வந்து போனது.
ஒரு
கிழமை சென்றதன் பிற்பாடு.அவள் வழமைக்கு மாற வேண்டிய நிர்பந்தம்.வேலைக்கு
செல்ல ஆயத்தமானாள்.வீட்டை விட்டு பஸ்ஸிற்காக தெருமுனையை அடைந்த போது சாஹிரா எதிரே வந்தாள்."அஸ்ஸலாமு
அலைக்கும் சாஹிரா" "வலைக்கும் ஸலாம்" என்னப்பா வேலைக்கா போற ? இது
உனக்கே நல்லா இருக்கா? உனக்கு நிச்சயம் பண்ணி வைத்த மாப்பிள்ளை மைவ்த்
(இறந்து) ஆகி ஒரு கிழமை தான் ஆகுது அதுக்குள்ள வேலைக்கு போற" என
வித்தியாசமாக பார்த்தாள்.ரஹிமாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.என்னை
நன்றாக புரிந்து கொண்ட நண்பியே இவ்வாறு பேசும் போது ஏன் மற்றவர்கள் பிழையாக
பேசமாட்டார்கள்.என்னவென்று இவர்களுக்கு நான் புரிய வைப்பது.பேசாமல்
போனாலும் பிரச்சினை இவளாக ஏதும் சொன்னாலும் தவறு.என்ன பண்ணுவதென்று
தெரியாமல் யோசித்து கொண்டிருந்த போது பேருந்து வர "சாஹிரா இன்னிக்கு நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வா.இன்ஷாஅல்லாஹ் எல்லாம் விளக்கமாக பேசலாம்" என கூறியவளாக ஸலாம் கூறி விடை பெற்றாள்.
சொன்னபடியே இரண்டு நாள் கழித்து ரஹிமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்
சாஹிரா.அவளை இன்முகத்துடன் ஸலாம் கூறி வரவேற்ற ரஹிமா.அவளுக்கு
சாப்பிடுவதற்கு ஏதும் எடுத்து வர உள்ளே சென்றுவிட்டாள்.அப்போது ரஹிமாவின்
உம்மாவிடம் பேச்சு கொடுத்தால் சாஹிரா."என்னம்மா
நீங்க நீங்களாச்சும் அவளுக்கு புத்தி சொல்ல வேணாம்.இப்போ என்ன அவசரம் இவள்
வேலைக்கு போக கொஞ்சம் நாள் கழிச்சு போயிருக்கலாமே. ஊர்காரங்க என்னமேல்லாம்
பேசுறாங்க தெரியுமா.இவ அதிஷ்டம் குறைஞ்சவளாம்.அதனால தான் திருமணத்திற்கு
முன்னமே சாதிக்க இழந்திட்டு நிக்கிறான்னு.. " என்று சொல்லி முடிக்கும் முன்னே ரஹிமா அங்கு வந்து இவள் சொன்னதை கேட்டுவிட்டாள். "நஊதுபில்லாஹி மின்ஹா"
என்ன பேசுறன்னு தெரிஞ்சிட்டே தான் பேசுறீயா சாஹிரா?.இஸ்லாத்துக்கு முரணான
எதையும் இங்க பேச வேணாம். அதிஷ்டம்,சகுனம் எல்லாம் மூடநம்பிக்கைகள்னு
உனக்கு தெரியாதா?. மத்தவங்க பேசுறாங்கன்னா நீயுமா?" எனக் கேட்டவளாக அமைதியானாள். சாஹிராவும் எதுவும் பேசாமல் விடைபெற்றாள்.
இரவு இருளில் நீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்ட ரஹிமா அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தித்தாள். "யாஅல்லாஹ்
எனக்கு பொறுமையை அளித்திடுவாயாக. என்னுடைய பாவங்களை மன்னித்திடுவாயாக.
யாரெல்லாம் என்னை தவறாக என்ணுகின்றார்களே அவர்களுக்கு நல்ல எண்ணத்தை
கொடுத்திடுவாயாக.திருமணமே முடிக்காது போனதற்கு ஏதும் நலவு இருக்கும் என்று
எனக்கு தெரியும்.ஒவ்வொரு கஸ்டத்திலும் ஒரு இலேசு உண்டு என்பதும் நான்
அறிந்ததே.'பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்' (2:153) என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டாள் ரஹிமா.
சில
மாதங்களின் பின் ரஹிமாவின் திருமணம் தொடர்பாக பேச்சு அடிபட்டது. ரஹிமாவின்
வாப்பா அவளின் உம்மாவிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். "என்ன
பண்றன்னே தெரியல சுலைகா, நிறைய பேரிடம் பேசிட்டன் எல்லாரும் சாதிக்கின்
மரணத்தோட நம்ம பெண்ணையும் தொடர்பு படுத்தியே பேசுறாங்க.அவ என்ன பண்ணா? இல்ல
அந்த பையனுக்குத்தான் தெரியுமா? இப்டி நடக்கும் என்டு காய்ச்சல் என்று
கொண்டு போனாங்க.இரண்டு நாளா கண்ணே முளிக்கல அப்புறம் இரத்ததுல கிருமி
என்டாங்க மூணாம் நாள் அவன் இந்த உலகததையே விட்டு போய்ட்டான்.ம்ஹ்ஹ் என்ன
பண்ற?.
சுலைகா
நம்ம பையன் கிட்ட பேசுங்க ஏதாச்சும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி பார்க்க
சொல்லி என்று முடிக்கும் முன்னே பாஸீத்தின் மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள்
நுழைந்தது.
அவனுடன்
யாரே இளைஞனும் கூட வர சுலைகா உள்ளே சென்று விட்டாள். பாஸித் தனது நண்பன்
வாஹிதை தனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தான்.வாஹித் ஸலாம் கூறிக்கொண்டு
பாஸித் அருகே அமர்ந்தான். வாப்பா இது என்னோட நண்பன் வாஹித்.நம்ம
ஊர் பாடசாலையில தான் கணித ஆசிரியரா இருக்கான்.பாடசாலையில் இருந்தே எனக்கு
தெரியும்.இவன் வெளியூர்ல படிச்சதால நீங்க பெரிசா கண்டு இருக்க
மாட்டீங்க.நல்ல மார்க்கபற்றும் இருக்கு வாப்பா.இவனா விரும்பி ஒரு விடயத்த
எங்கீட்ட கேட்டான் வா வீட்ட போய் பேசலாம் என்டு கூட்டி வந்தன்.
"என்ன மகன் , என்ன விஷயம் தயங்காம சொல்லுங்க " என்றார் பாஸித்தின் தந்தை.
வாஹித் நீயே பேசு வாப்பா கிட்ட அப்போ தான் தெளிவா சொல்ல முடியும்" என்றான் பாஸித்.
எனக்கு
நேரடியா எதுவும் பேசித்தான் பழக்கம்.சுத்தீ வளைக்க தெரியாது. நான் உங்க மக
ரஹிமாவ திருமணம் செய்ய விரும்புறன்.எங்க வீட்லயும்
பேசிட்டன்.எல்லோருக்கும் விருப்பம்.உங்க விருப்பத்த தெரிவிச்சிங்கன்னா
மேற்கொண்டு நடக்கீற காரியத்த பார்க்கலாம் என்று வந்த விடயத்தை தெளிவாக சொல்லி முடித்தான் பாஸித்.
அல்ஹம்துலில்லாஹ்.
இப்ப தான் நான் உம்மாகிட்ட பேசிட்டு இருந்தன். எல்லாம் நன்மைக்கு
தான்.மகன் அல்லாஹ் தன்னை நம்பினோரை எப்பவும் கைவிட்டதே இல்ல .எனக்கு
மனப்பூரணமா சம்மதம்.இருங்க இப்பவே சுலைகாடையும் , ரஹிமாடையும் கேட்டுட்டு வாரன். என்று உள்ளே சென்ற சற்று நிமிடத்தில் முகத்தில் சந்தோசத்துடன் திரும்பி வந்தார்.
இருவீட்டார்
சம்மதத்துடன் இறைவன் நாடியபடியே வாஹித், ரஹிமா திருமணம்
நடைபெற்றது.அன்றும் ரஹிமா இரு கரம் ஏந்தியவளாக கண்ணீர் மல்க இறைவனுடன்
பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.இருளில் கிடைத்த விடியலை எண்ணி...
உங்கள் சகோதரி....
பஸ்மின் கபீர்
Tweet | ||||||