அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப் படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர்.
ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.
தொலைக்காட்சியானது சிறியவர் முதல் பெரியவர்வரைக்குமான நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்து ஒவ்வருவரையும் மீள முடியாத தனது பிடிக்குள் சிக்க வைத்திருப்பதை காணமுடிகின்றது.இதன் பிரதிவிம்பத்தையும் நமது பெண்களில் இலகுவாக அறியலாம்.நமது அடிப்படைத்தேவை பூர்த்தியாகாமல் இருக்க முடியும் ஆனால் தொலைக்காட்சி இல்லாத வீடுகள் இல்லை எனலாம்.இப்போது அதன் இடத்தை கணணி,இணையம் பிடித்துக்கொண்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இன்று ஊடகத்தில் இழிவுபடுத்தப்படும் முஸலிம் பெண்கள் மற்றும் ஊடகங்களால் சீரழியும் முஸ்லிம் பெண்களை பாதுக்க வேண்டி பெண்களால் மட்டுமே நடாத்தப்படும் தொலைக்காட்சி சேவை ஆரம்பமாக போகின்றது.
பெண்களை இஸ்லாம் மேன்படுத்தி உள்ளது.பெண்களுக்கு உச்ச கட்ட சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றது.ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வேப்பங்காயாக தான் தெரியும்.முஸ்லிம் பெண்களின் வளர்ச்சியில் அடுத்த மைல் கல் "நிக்காப் அணிந்து பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சேவை"
நிக்காப் அணிந்தா அப்ப எதுக்கு தொலைக்காட்சின்னு நீங்க கேக்குறது புரியுது.
முதலில் நிக்காப் வலியுறுத்தவும், "எங்களாலும் முடியும்" என்பதை காட்டவுமே இந்த சகோதரிகள் ஊடக துறைக்கு முன்வந்துள்ளனர்.
ஊடகங்கள் சாத்தியமில்லாத ஒரு எதிர்பார்ப்பினை பெண்களுக்காக வென்றே சமுதாயத்தில் உருவாக்கி நிலையில்லாத இஸ்திரத்தன்மையற்ற உண்மைக்கு மாறான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையை மாற்றவே றமழானில் எகிப்தில் ஒரு தொலைக்காட்சி புரட்சி ஆரம்பமாகவுள்ளது.
ஜூலை 21, இல்(முழுமையாக முகத் தை முக்காடு) அணிந்துபெண்களால் மட்டுமே முற்றிலும் நிர்வகிக் கப்படும் முதல்எகிப்திய செயற்கை க்கோள் சேனல் ரமலான் புனித நோ ன்புமாதத்தின் முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
"மரியா" என்ற புதிய தளத்தில் இவ் தொலைக்காட்சி சேவையானது முற்றிலும் பெண்களால் மாத்திரமே நடாத்தப்பட இருக்கின்றது.அதன் இயக்குனர், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் , பங்குபற்றுனர்கள் அனைவரும் முஸ்லிம் பெண்களாகவும் "நிக்காப்" அணிந்தவர்களாகவுமெ பணியாற்றுவர் என்பது குறிப்பிடதக்கது.
இவ் தொலைக்காட்சியின் பொறுப்பாளரான Safaa al-Refaie
"நிக்காப்" என்பது "சிவப்பு கோடு போன்றது அதனை யாரும் கடக்க முடியாது"
(“Niqab is a red line that cannot be crossed,” ) எகிப்தில் வெளிவரும் தினசரி பத்திரிகையான AL-Ahram க்கு தெரிவித்துள்ளார்.மேலும் இவ் தொலைக்காட்சி சேவையை நடாத்துவதற்கான நிதி மூலம் தொடர்பாக வினவிய போது அது தொடர்பான தகவல்கள் எதுவும் அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
(“Niqab is a red line that cannot be crossed,” ) எகிப்தில் வெளிவரும் தினசரி பத்திரிகையான AL-Ahram க்கு தெரிவித்துள்ளார்.மேலும் இவ் தொலைக்காட்சி சேவையை நடாத்துவதற்கான நிதி மூலம் தொடர்பாக வினவிய போது அது தொடர்பான தகவல்கள் எதுவும் அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
"மரியா" என்ற பெயர் முஹம்மது நபியின் மனைவிகளில் ஒருவரின் பெயர் என்பதாலும் என்ற காரணத்தால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி சேவையில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான செய்திகள் மற்றும் திருமண வாழ்வு தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்க மாட்டாது.இவ் தொலைக்காட்சி சேவையின் முக்கிய இலக்கானது முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் தொடர்பான கல்வி அறிவை போதிப்பது தொடர்பாகவே இருக்கும்
Safaa al-Refaie அவர்கள் மேலும் குறிப்பிடும் போது " எங்களுடைய செய்தியானது நேரடியாக முஸ்லிம் பெண்களுக்கே உரியதாகும்.அதிலும் குறிப்பாக திருமணம் தொடர்பான விடயங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முறையை (சுன்னாவை) பின்பற்றியதாகவே அமைந்திருக்கும் என்றார்.
இவர் மேலும் கூறுகையில் "கடந்த காலங்களில் நிக்காப் அணிந்த பெண்களை ஊடகங்களில் கொடுமைப்படுதப்பட்டதை இல்லாமல் செய்து அவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கிலே இவ் சேவையானது ஆரம்பிக்கப்பட இருக்கின்றது"
நிக்காப் என்பது எகிப்து சமூகத்தில் பொதுவானதாக இருந்தாலும் எகிப்திய தொலைக்காட்சி சேவைகளில் தடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.எகிப்திய முன்னாள் ஐனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் காலப்பகுதியில் பெண்தொகுப்பா ளர்கள் ஹிஐ◌ாப்புடன் திரையில் தோன்றுவது தடை செய்யப்பட்டிருந்தது.
இவ் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களுக்கு 2 விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
1.முழுமையாக பணியாற்றும் போது நிக்காப் அணிவது.
2.நிரலில் தோன்றும் போது மட்டும் நிக்காப் அணிவது.
நிரலில் தோன்றும் போது மட்டும் நிக்காப் அணிவது ஏன் வலியுறுத்தப்படுகின்றது என்றால் குறித்த நிபுணரின் முகம் பிறர் அறியாமல் இருப்பதால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கவே ஆகும்.
Al-Ahram daily's இணையதளம் இவ் தொலைக்காட்சி சேவை தொடர்பாக குறிப்பிடும் போது ஆண்கள் தளத்தில் தோன்றுவதை தடை செய்திருப்பதோடு பணியாற்றுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.நேரடி நிகழ்ச்சி திட்டங்களின் போது கூட தொலைபேசி நிரல்களிலும் பங்கேற்க அனுமதி இல்லை என்று கூறப்படுகின்றது.
எதிர்கொண்டுள்ள றமழானில் நாம் சிறப்பாக செயற்பட இவ் தொலைக்காட்சி சேவை நமக்கு துணைபுரியவும், இவ் சகோதரிகளின் முயற்சிக்கு அல்லாஹ் துணை இருக்கவும் பிரார்த்தனை செய்வோம்..
உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்
குறிப்பு:- (இக் கட்டுரை எழுதுவதற்கு தூண்டிய ஆமீனா சகோதரிக்கும் ஜெய்லானி சகோதரருக்கும் ஐஸாக்கல்லாஹைரன்)
Tweet | ||||||