அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
மழைக்காலம் தொடங்கி விட்டது .மழையின் ஆரம்பத்திலே நோய் தொற்றுக்களும் பரவத் தொடங்கிவிடும். அந்த வகையில் மழைக்காலத்தில்
டெங்கு காய்ச்சல் மிகப்பாரிய தாக்கத்தை கடந்த வருடமும் ஏற்படுத்தி சென்றது. எனவே ஆரம்பத்திலே முற்காப்பினை மேற்கோண்டு மேலதிகமாக இடம் பெறும் உயிர் சேதங்களை தவிர்த்துக் கொள்வோம்.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.
டெங்கு காய்ச்சல் 4 கட்டங்களை கொண்டது
டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு சாதாரண காய்ச்சல், டெங்கு ரத்த போக்கு காய்ச்சல், டெங்கு அதிர்ச்சி நோய் என 3 கட்டங்களை கொண்டது.
டெங்குவின் முதல் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, கண் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். டெங்குவின் 2ம் கட்டத்தில் கண், மூக்கு, நக கண், பல் ஈரலில் இருந்து ரத்தம் வெளியேறும். அதன்பின், உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். உடலில் அம்மை போன்று சிறு புள்ளிகள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்.

மலம் கருப்பாகவும், சிறுநீர் சிவப்பு நிறத்திலும் போகும்.
டெங்குவின் கடைசி கட்டத்தில் உடலின் உள்ளேயும், வெளியேயும் ரத்த போக்கு
இருக்கும். நினைவுகள் தடுமாறும். சுயநினைவு இழக்கும். அதன்பின், கோமா
நிலைக்கு தள்ளப்பட்டும், உயிரிழப்பு ஏற்படும். அதனால், டெங்கு காய்ச்சல்
அறிகுறிகள் தென்பட்ட உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று
கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும்.
இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும். முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும். கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம். கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா? டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

Tweet | ||||||